உலக பேட்மிண்டன் போட்டி: கால்இறுதியில் சாய்னா வெளியேற்றம்


உலக பேட்மிண்டன் போட்டி: கால்இறுதியில் சாய்னா வெளியேற்றம்
x
தினத்தந்தி 3 Aug 2018 7:42 AM GMT (Updated: 3 Aug 2018 7:42 AM GMT)

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். #BadmintonWorldChampionship

நான்ஜிங்,

24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 7-வது இடம் வகிக்கும் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் 6-21, 11-21 என்ற புள்ளி கணக்கில் சாய்னாவை வீழ்த்தினார். ஆட்டம் தொடங்கி 31வது நிமிடத்திலே சாய்னாவை அவர் வீழ்த்தினார். அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் மரின், 6ம் இடம் வகிக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவுடன் மோத உள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேற்றப்பட்ட நிலையில், சாய்னா நேவாலும் தொடரில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story