பிற விளையாட்டு

தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் + "||" + Married to girl who accused him of rape, table tennis player Soumyajit Ghosh picking up pieces

தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்

தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்
தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் மணந்தார். #SoumyajitGhosh
கொல்கத்தா

பிரபல இந்திய டேபிள் டென்னிஸ்  வீரர்  சவும்யாஜித்  கோஷ்  2 முறை இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாடி உள்ளார். அர்ஜூனா விருதும் பெற்று உள்ளார்.

கோஷ் மீது 18 வயது பெண் ஒருவர் மேற்கு  வங்க மாநிலம் பர்ஷாத் மகளிர் காவல் நிலையத்தில்  கடந்த மார்ச் மாதம் புகார்  ஒன்று அளித்து உள்ளார். அதில்  கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம் அதில் அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து கடந்த 3 வருடங்களில் பல சந்தர்ப்பங்களில்  பாலியல் பலாத்காரம் செய்தார். நான் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்து உள்ளேன். 

பின்னர் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார் என கூறி உள்ளார். 

இளைய தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் மீது  கற்பழிப்பு, குற்றவியல் சதி குற்றச்சாட்டு, பெண் சம்மதம் மற்றும் மோசடி ,கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து சவும்யாஜித் கோஷை நீக்கம் செய்ததுடன்,அவரை தற்காலிக இடைநீக்கம் செய்தும் முடிவு எடுக்கப்பட்டது. 

இதனால் கடந்த நான்கு மாதங்களாக எந்தப் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த அவர், தற்போது அந்தபெண்ணை திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்ததை நினைத்து புலம்புவதைவிட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்பட்டதாகத் தெரிவித்த அவர், ஒலிம்பிக் போட்டிதான் தன்னுடைய இலக்கு என்றும் அதற்கான பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.