வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 3-வது சுற்றுக்கு தகுதி


வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 3-வது சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 8 Aug 2018 10:30 PM GMT (Updated: 8 Aug 2018 7:27 PM GMT)

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஷி மின்க் சிட்டி,

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷி மின்க் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அஜய் ஜெயராம், இந்தோனேஷியா வீரர் காட்ஜ்ரா பிலியங்கை சந்தித்தார். 30 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அஜய் ஜெயராம் 21-7, 21-16 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். 3-வது சுற்று சுற்று ஆட்டத்தில் அஜய் ஜெயராம், பிரேசில் வீரர் யகோர் கோயல்ஹோவை எதிர்கொள்கிறார்.

Next Story