துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 14 Aug 2018 10:00 PM GMT (Updated: 14 Aug 2018 7:15 PM GMT)

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டின்டு லூக்கா, ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகல்.


* வருகிற 18-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டில் கால்பந்து, ஹேண்ட்பால் போட்டிகள் மட்டும் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டன. இதில் ஹேண்ட்பால் போட்டியின் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 19-36 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

* இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டின்டு லூக்கா, கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த துஷார் ஆரோத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இடைக்கால பயிற்சியாளராக இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் 40 வயதான ரமேஷ் பவார் செயல்பட்டார். இந்த நிலையில் ரமேஷ் பவாரை, இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. அவர் 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி வரை அந்த பணியை முழு நேரமாக கவனிப்பார் என்றும், அந்த காலக்கட்டத்தில் இந்திய பெண்கள் அணி இலங்கை, வெஸ்ட் இண்டீசுக்கு சென்று விளையாடுவதுடன் நவம்பர் மாதத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்க இருப்பதாக கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 1978-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய தடகள வீரரான ஹகாம் சிங், கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக பஞ்சாப் மாநிலம் சங்ருரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64.


Next Story