பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Drops

து ளி க ள்

து ளி க ள்
ஆசிய விளையாட்டில் ஹேண்ட்பால் போட்டி முன்கூட்டியே தொடங்கி நடந்து வருகிறது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி, கேப்டன் விராட் கோலியை மட்டுமே நம்பி இருப்பதாக சொல்வது நியாயமற்றது. கடந்த சில ஆண்டுகளாக கோலியின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர் வியப்புக்குரிய வகையில் விளையாடி வருகிறார். அதே நேரத்தில் மற்ற வீரர்களும் சிறந்தவர்கள் தான். புஜாராவும், ரஹானேவும் அற்புதமான பேட்ஸ்மேன்கள். புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரி 50 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் ரஹானேவின் சராசரி 50 ரன்களுக்கு மேல் உள்ளது. இதே போல் லோகேஷ் ராகுல், முரளிவிஜய், தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் திறமையானவர்கள் தான். போதிய அளவுக்கு தயாராகாதது, இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தடுமாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.’ என்றார்.

* ஆசிய விளையாட்டில் ஹேண்ட்பால் போட்டி முன்கூட்டியே தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (டி பிரிவு) இந்திய அணி 25-32 என்ற புள்ளி கணக்கில் பக்ரைனிடம் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.

* டென்னிஸ் தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, பல்கேரியாவின் அஸரென்கா ஆகியோருக்கு வருகிற 27-ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வகையில் வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

* பாலெம்பேங் நகரில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான கிராமத்தில் இந்திய குழுவினர் தேசிய கொடியை ஏற்றி நேற்று சுதந்திர தினத்தை கொண்டாடினர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு தலா ரூபாய் 20 லட்சம் முதல்-அமைச்சர் பழனிசாமி
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு தலா ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் ஆட்டத்தில் நேற்று இந்தியா 3 வெண்கலப்பதக்கம் வென்றது.
3. ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு
ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக முதல்அமைச்சர் அறிவித்துள்ளார்.
4. ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரே நாளில் 7 பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்றுள்ளது.
5. பெண்கள் கபடியில் இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ஆசிய விளையாட்டு பெண்கள் கபடியில் இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறியது.