ஆசிய போட்டிகள்; ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி


ஆசிய போட்டிகள்; ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி
x
தினத்தந்தி 20 Aug 2018 10:04 AM GMT (Updated: 20 Aug 2018 10:04 AM GMT)

ஆசிய போட்டி தொடரில் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

ஜகார்தா,

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951–ம் ஆண்டு டெல்லியில் முதல்முறையாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் கடந்த 18 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் செப்டம்பர் 2–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியா ஆசிய விளையாட்டை நடத்துவது இது 2–வது முறையாகும். ஏற்கனவே 1962–ம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.

ஆசிய விளையாட்டு இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில், இந்தியா சார்பில் பங்கேற்ற லக்‌ஷய் வெள்ளிப்பதக்கம் தட்டிச்சென்றார். ஆசிய போட்டிகளில் இந்தியா தற்போது வரை, ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம்  என 4 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. 11 தங்கம், 5 சில்வர், 4 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் சீனா பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 


Next Story