6-வது புரோ கபடி அக்டோபர் 5-ந்தேதி தொடக்கம்


6-வது புரோ கபடி அக்டோபர் 5-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 23 Aug 2018 10:08 PM GMT (Updated: 23 Aug 2018 10:08 PM GMT)

6-வது புரோ கபடி லீக் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 5-ந்தேதி தொடங்கும் இந்த கபடி திருவிழா ஜனவரி 5-ந்தேதி வரை இந்தியாவின் 13 நகரங்களில் நடைபெறுகிறது.

புதுடெல்லி, 

6-வது புரோ கபடி லீக் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 5-ந்தேதி தொடங்கும் இந்த கபடி திருவிழா ஜனவரி 5-ந்தேதி வரை இந்தியாவின் 13 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அக்.5-ந்தேதி சென்னையில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அதே நாளில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பை-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. பிளே-ஆப் சுற்றில் 3 வெளியேற்றுதல் மற்றும் இரண்டு தகுதி சுற்று அடங்கும். இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும்.

Next Story