ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி
x
தினத்தந்தி 14 Sep 2018 9:00 PM GMT (Updated: 14 Sep 2018 8:36 PM GMT)

முன்னணி வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

டோக்கியோ, 

முன்னணி வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 4–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 33–ம் நிலை வீரர் லீ டோங் குன்னை (தென்கொரியா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21–19, 16–21, 18–21 என்ற செட் கணக்கில் லீ டோங் குன்னிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 19 நிமிடம் நீடித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Next Story