துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 Sep 2018 8:30 PM GMT (Updated: 15 Sep 2018 7:44 PM GMT)

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

*இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டால், நவம்பர் மாதம் தொடங்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக கூடுதலாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

*பார்முலா1 கார்பந்தயத்தில் 15–வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி இன்று நடக்கிறது. இதில் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதல் வரிசையில் இருந்து புறப்படுவார்.

*பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் கடைசி 8 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story