பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Thulikal

து ளி க ள்

து ளி க ள்
*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.

*இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடனான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக தெண்டுல்கர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது. யுவன்டெஸ் அணியில் இரண்டு கோல்களையும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (50 மற்றும் 65–வது நிமிடம்) அடித்தார். ரியல்மாட்ரிட் கிளப்பில் இருந்து யுவன்டெஸ் கிளப்புக்கு மாறிய பிறகு ரொனால்டோ அடித்த முதல் கோல் இதுவாகும்.

*போலந்தில் நடந்த 13–வது சிலிசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில், 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரிகோம் 5–0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அய்ஜெரிம் கசனாயேவை பதம்பார்த்து தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த ஆண்டில் மேரிகோம் வென்ற 3–வது தங்கப்பதக்கம் இதுவாகும்.தொடர்புடைய செய்திகள்

1. து ளி க ள்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பெங்களூரு எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
2. து ளி க ள்
உலக கோப்பை ஆக்கி போட்டியின் போது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டேனிஸ் கலீம் எச்சரிக்கையுடன் தப்பினார்.
3. து ளி க ள்
புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 100–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29–27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 13–வது வெற்றியை ருசித்தது.
4. துளிகள்
12–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18–ந் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.
5. து ளி க ள்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி தொடங்குகிறது.