பிற விளையாட்டு

சாய்னா நேவால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார் + "||" + Saina Nehal romantic marriage Badminton player married Kashyap

சாய்னா நேவால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்

சாய்னா நேவால் காதல் திருமணம் பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்
இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது காதலரும், பேட்மிண்டன் வீரருமான காஷ்யப்பை மணக்கிறார்.

ஐதராபாத், 

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது காதலரும், பேட்மிண்டன் வீரருமான காஷ்யப்பை மணக்கிறார்.

சாய்னா நேவால் திருமணம்

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால் ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும், ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்த காதல் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள்.

டிசம்பர் 16–ந் தேதி நடக்கிறது

சாய்னா நேவால்–காஷ்யப் திருமணத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவர்களது திருமணம் டிசம்பர் 16–ந் தேதியும், அதைத்தொடர்ந்து பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு டிசம்பர் 21–ந் தேதியும் நடைபெற இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருமணத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.

சாய்னா நேவால் 2015–ம் ஆண்டில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்து இருக்கிறார். அத்துடன் 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் (லண்டன்) வெண்கலப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2015–ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2017–ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2010 மற்றும் இந்த ஆண்டில் தங்கப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார். காஷ்யப் உலக தரவரிசையில் அதிகபட்சமாக 6–வது இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும் 2010–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதன் பிறகு அடிக்கடி காயம் அடைந்ததால் அவரால் களத்தில் ஜொலிக்க முடியவில்லை.

விளையாட்டு ஜோடிகள்...

சாய்னாவும், காஷ்யப்பும் ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் ஒன்றாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். இருவரின் காதல் குறித்து தகவல் கசியும் போதெல்லாம் கருத்து கேட்டால் மவுனம் காத்து வந்தனர். இந்த திருமணத்தின் மூலம் அவர்களது காதல் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இடையே காதல் திருமணங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணமாக தினேஷ் கார்த்திக் (கிரிக்கெட்)–தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), இஷாந்த் ‌ஷர்மா (கிரிக்கெட்)–பிரதிமா சிங் (கூடைப்பந்து), கீதா போகத்–பவன் குமார், சாக்ஷி மாலிக்–சத்யவார்த் காடியன் (4 பேரும் மல்யுத்தம்) ஆகிய விளையாட்டு பிரபலங்களை சொல்லலாம். தற்போது இந்த வரிசையில் சாய்னா நேவால்–காஷ்யப் ஜோடி இணைய இருக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்; முன்னாள் காதலன் கைது
தஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
2. காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3. காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் போலீசில் தஞ்சம்
காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
4. நர்சை கர்ப்பமாக்கி கொன்ற காதலன் கைது: வேனில் காதல் பாட்டுகளை இசைத்து இளம்பெண்களை மயக்கினார்
நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காதலன், வேனில் காதல் பாட்டுகளை இசைத்து இளம்பெண்களை மயக்கி ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.
5. குமரி நர்சு சாவில் திடீர் திருப்பம்: காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்
குமரி நர்சு சாவு தொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொன்றது அம்பலமாகி உள்ளது.