செஸ் போட்டியில் இணைந்த காதல் ஜோடி


செஸ் போட்டியில் இணைந்த காதல் ஜோடி
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

43–வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது.

பாதுமி, 

43–வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2–வது சுற்று தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், தனது கொலம்பிய நாட்டு தோழியும், செஸ் கிராண்ட்மாஸ்டருமான ஏஞ்சலோ பிராங்கோவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். பிராங்கோவின் முன்பு மண்டியிட்டு நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். அவரும் ஏற்றுக்கொள்ளவே, அவரது விரலில் மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்வை கண்ட மற்ற செஸ் வீரர், வீராங்கனைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

1 More update

Next Story