ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீரர் துஷார் அரைஇறுதிக்கு தகுதி


ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீரர் துஷார் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 Sep 2018 9:15 PM GMT (Updated: 27 Sep 2018 9:12 PM GMT)

25–வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.

சென்னை, 

25–வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ருத்விக் ராவ் 12–10, 4–11, 11–8, 1–11, 7–11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சியோ யீ ஸியானிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் உத்கர்ஷ் பஹெதி 8–11, 1–11, 6–11 என்ற நேர்செட்டில் பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் ஸிப்பிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் துஷார் ‌ஷஹனி 11–9, 9–11, 11–8, 8–11, 11–9 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் ஹோ காவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை நவ்மி ‌ஷர்மா 4–11, 3–11, 3–11 என்ற நேர்செட்டில் நம்பர் ஒன் வீராங்கனையான லா வென் லியிடம் (மலேசியா) தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story