துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 Sep 2018 9:00 PM GMT (Updated: 28 Sep 2018 7:58 PM GMT)

* வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன், இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆசிய போட்டி இறுதிப்போட்டியில் ஆடாமல் தாயகம் திரும்பினார்.

*பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 15–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்த போட்டியில் 5 முறை உலக சாம்பியனான மேரிகோம் (48 கிலோ பிரிவு) தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது. சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா, சீமா பூனியா உள்பட 10 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

* வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன், இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆசிய போட்டி இறுதிப்போட்டியில் ஆடாமல் தாயகம் திரும்பினார். வலி அதிகமாக இருந்ததால் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த காயம் குணமடைய குறைந்தது 6 வாரங்கள் ஆகும்.

*இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் 2018–19–ம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில், இந்திய தொடரில் அசத்திய இளம் ஆல்–ரவுண்டர் சாம் குர்ரன் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

*கேல்ரத்னா விருது பெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன் மீராபாய் சானு நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோவும், காமன்வெல்த் போட்டியில் 196 கிலோவும் எடை தூக்கினேன். இது தான் எனது சிறந்த செயல்பாடு ஆகும். புதிய விதி காரணமாக 48 கிலோ எடைப்பிரிவில் இருந்து 49 கிலோ பிரிவுக்கு மாற வேண்டி உள்ளது. இப்போது எனது இலக்கு 210 கிலோ எடை தூக்க வேண்டும் என்பது தான். இதை செய்து விட்டால் உலக அளவிலான எந்த போட்டியிலும் பதக்கம் வெல்ல முடியும்’ என்றார்.

*நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மும்பை வந்த முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் அமெரிக்காவின் மைக் டைசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘குத்துச்சண்டையில் சாதித்துள்ள பெரும்பாலான வீரர்கள் குடிசை பகுதியில் இருந்து வந்தவர்களே. நானும் அப்படிப்பட்டவன் தான். ஏழையாக இருந்தால் நிச்சயம் சிறந்த குத்துச்சண்டை வீரராக உருவெடுக்க முடியும் என்று கருதுகிறேன்’ என்றார்.

*அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும், ஆனால் அணியில் இடம் பிடிப்பது சவாலான ஒன்று என்றும் தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஸ்டெயின் கூறியுள்ளார்.


Next Story