புரோ கபடி லீக்: மும்பையிடம் வீழ்ந்தது அரியானா


புரோ கபடி லீக்: மும்பையிடம் வீழ்ந்தது அரியானா
x

12 அணிகள் பங்கேற்றுள்ள 6–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.

சோனிபட், 

12 அணிகள் பங்கேற்றுள்ள 6–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு அரங்கேறிய 13–வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34–29 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 2–வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை) அணி 53–26 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை துவம்சம் செய்து 2–வது வெற்றியை பதிவு செய்தது.

இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்– உ.பி.யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்–புனேரி பால்டன் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.


Next Story
  • chat