புரோ கபடி: மும்பை அணியிடம் பணிந்தது ஜெய்ப்பூர்


புரோ கபடி: மும்பை அணியிடம் பணிந்தது ஜெய்ப்பூர்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:15 PM GMT (Updated: 9 Nov 2018 7:45 PM GMT)

12 அணிகள் பங்கேற்றுள்ள 6–வது புரோ லீக் கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை, 

12 அணிகள் பங்கேற்றுள்ள 6–வது புரோ லீக் கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு மும்பையில் நடந்த 54–வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) அணி 48–24 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை பந்தாடியது. மும்பை அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சிங் 12 புள்ளிகளும், தர்‌ஷன் காடியன் 10 புள்ளிகளும் எடுத்தனர். 9–வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சுவைத்த 7–வது வெற்றி இதுவாகும். ஜெய்ப்பூர் அணிக்கு விழுந்த 6–வது அடியாகும்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா– குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்(இரவு 9 மணி) ஆகிய அணிகள் சந்திக்கின்றன.


Next Story