பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Thulikal

து ளி க ள்

து ளி க ள்
*ஆஸ்திரிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி லின்ஸ் நகரில் நடந்து வருகிறது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான அந்த அணியின் உதவி பயிற்சியாளராக இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் நேற்று நியமிக்கப்பட்டார்.

*ஆஸ்திரிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி லின்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் தரவரிசையில் 35–வது இடம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த சத்யன் 4–11, 11–9, 11–9, 8–11, 6–11, 11–9, 11–7 என்ற செட் கணக்கில் 16–ம் நிலை வீரரான மார்கஸ் பிரெட்டாசுக்கு (போர்ச்சுகல்) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

*‘புரிந்துணர்வு ஒப்பந்தபடி இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் நேரடி தொடரில் விளையாடுவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உறுதி செய்ய வேண்டும், அது தொடர்பாக பல முறை பேசி விட்டோம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மானி தெரிவித்துள்ளார். இந்தியா–பாகிஸ்தான் இடையே நேரடி தொடர் நடக்காத பட்சத்தில், ஐ.சி.சி. போட்டிகளில் மட்டும் ஏன் அவர்கள் (இந்தியா) எங்களுடன் மோத வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

*அடுத்த ஆண்டு 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததும், இங்கிலாந்தில் மே 30–ந்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டிக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு வாரத்திற்கு முன்பாக அதாவது மார்ச் 23–ந்தேதி 12–வது ஐ.பி.எல். போட்டி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

*அபுதாபியில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (86 ரன், நாட்–அவுட்) அரைசதம் அடித்தார். பின்னர் 210 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
2. துளிகள்
ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 11 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
3. துளிகள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் 42 வயதான முன்னாள் வீரர் கிரேக் மேக்மிலன் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியுடன் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
4. துளிகள்
* குழந்தை பெற்றுக்கொண்டு ஓய்வில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை 32 வயதான சானியா மிர்சா அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் களம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார்.
5. துளிகள்
உலக பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.