பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Thulikal

து ளி க ள்

து ளி க ள்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் இன்று தொடங்குகிறது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘காயத்துக்கு ஆபரேஷன் செய்துள்ள விருத்திமான் சஹா ஏறக்குறைய ஓராண்டாக இந்திய அணியில் இல்லை. இருப்பினும் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தான். அவர் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவார்’ என்றார்.

* ‘அடுத்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவையும், லோகேஷ் ராகுலையும் களம் இறக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிரடி காட்டி ரன்கள் குவிக்கும் வீரர்களின் அணிகளே பொதுவாக வெற்றி பெறுகின்றன. இதே போல் ஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவையும் சேர்க்க வேண்டும்’ என்று முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் வலியுறுத்தியுள்ளார்.

* டாக்காவில் நேற்று தொடங்கிய ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. மொமினுல் ஹக் (161 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (111 ரன், நாட்-அவுட்) சதம் அடித்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தனர். டெஸ்டில் 4-வது விக்கெட்டுக்கு வங்காளதேச ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

* ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் இன்று தொடங்குகிறது.

* டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தினார். ‘குயர்டன்’ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்(ஜெர்மனி)-மரின் சிலிச் (குரோஷியா), ஜோகோவிச் (செர்பியா)-ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு துளிகள்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த ஓட்டிஸ் கிப்சனின் (வெஸ்ட் இண்டீஸ்) ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.
2. துளிகள்
*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
3. துளிகள்
முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
4. துளிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.
5. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.