பிற விளையாட்டு

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி + "||" + Syed Modi International Badminton Saina, Kashyap qualifies for quarter finals

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

லக்னோ, 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–14, 21–9 என்ற நேர்செட்டில் சக வீராங்கனை அமோலிகா சிங் சிசோடியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் காஷ்யப் 9–21, 22–20, 21–8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் பிர்மான் அப்துல் கோலிக்கையும், சாய் பிரனீத் 21–12, 21–10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரேன் ருஸ்தாவிதோவையும், சமீர் வர்மா 22–20, 21–17 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஜாவ் ஜன்பெங்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.