பிற விளையாட்டு

புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால் + "||" + Pro Kabaddi League Bengal defeated Bangalore team

புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால்

புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால்
6–வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 77–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன.

புனே, 

6–வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 77–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி முதல் பாதியில் 15–13 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 26–26 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. அதன் பிறகு பெங்கால் அணி மீண்டும் முன்னிலை பெற்றதுடன் அதனை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. முடிவில் பெங்கால் அணி 33–31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 6–வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை–தபாங் டெல்லி (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்–தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.