சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி


சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 23 Nov 2018 9:30 PM GMT (Updated: 2018-11-24T02:05:33+05:30)

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

லக்னோ, 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், சக வீராங்கனை ரிதுபர்னா தாஸ்சை சந்தித்தார். 36 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21–19, 21–14 என்ற நேர்செட்டில் ரிதுபர்னா தாஸ்சை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–18, 16–21, 21–11 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஜோவ் ஸிகியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 16–21, 19–21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திக்கோம் தம்மாசினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 10–21, 21–19, 14–21 என்ற செட் கணக்கில் சீனாவின் லூ குவாங்ஜூவிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார்.


Next Story