துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 23 Nov 2018 9:00 PM GMT (Updated: 23 Nov 2018 8:47 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு வீரராக விராட்கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

* பாகிஸ்தான்–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் அபுதாபியில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்–2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

* உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ‘வால்ட்’ பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் 14,000 புள்ளிகள் குவித்து 6–வது இடத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை அருணா ரெட்டி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்.

* பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு வீரராக விராட்கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் இன்னும் நிறைய முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. என்னை பொறுத்தவரையில் கேப்டன் பதவியில் டோனி தான் இன்னும் சிறந்தவர். டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா–பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டி தொடரை விட இந்தியா–பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடரே மிகப்பெரியதாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

* 5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 37–வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2–1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சாய்த்து 4–வது வெற்றியை தனதாக்கியது. கேரளா அணியில் மதேஜ் போப்லாட்னிக் 73–வது நிமிடத்தில் கோல் அடித்தார். கடைசி நிமிடத்தில் கவுகாத்தி அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. அந்த அணி வீரர்கள் பார்த்லோமியூவ் ஒக்பிச் (பெனால்டி வாய்ப்பு), ஜூயன் மாஸ்சியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.–அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.


Next Story