புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 12-வது தோல்வி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 12-வது தோல்வி
x
தினத்தந்தி 14 Dec 2018 9:30 PM GMT (Updated: 14 Dec 2018 7:12 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

பஞ்ச்குலா,

6-வது புரோ கபடி லீக் தொடரில், அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்று இரவு நடந்த 112-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 21-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சிடம் பணிந்தது. 19-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 12-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 36-23 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்தது. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-யு மும்பா (இரவு 9 அணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story