மாநில கைப்பந்து போட்டி அரைஇறுதியில் இந்தியன் வங்கி


மாநில கைப்பந்து போட்டி அரைஇறுதியில் இந்தியன் வங்கி
x
தினத்தந்தி 19 Dec 2018 9:00 PM GMT (Updated: 19 Dec 2018 8:47 PM GMT)

68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 29–31, 25–19, 25–22, 25–19 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி. அணி 25–9, 25–19, 25–8 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு கால்இறுதியில் தமிழ்நாடு போலீஸ் அணி 17–25, 16–25, 25–19, 29–27, 15–11 என்ற செட் கணக்கில் பி.கே.ஆர். (ஈரோடு) அணியை போராடி சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.


Next Story