மாநில கைப்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


மாநில கைப்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 20 Dec 2018 9:25 PM GMT (Updated: 2018-12-21T02:55:49+05:30)

68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4–வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 24–26, 26–24, 25–20, 22–25, 15–13 என்ற செட் கணக்கில் ஜி.கே.எம். அணியை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐ.சி.எப். அணியில் ஆஷா, சனிஷா ஆட்டம் அபாரமாக இருந்தது. மற்றொரு அரைஇறுதியில் எஸ்.டி.ஏ.டி. அணி 25–12, 25–10, 25–22 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீஸ் அணியை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எஸ்.டி.ஏ.டி. அணியில் தனலட்சுமி, சங்கீதா ஆட்டம் எடுபட்டது. இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐ.சி.எப்.–எஸ்.டி.ஏ.டி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story