துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:30 PM GMT (Updated: 25 Dec 2018 7:06 PM GMT)

பிரான்ஸ் நாட்டின் சிறந்த கால்பந்து வீரராக 20 வயதான கைலியன் பாப்பே தேர்ந்தெடுக்கப்பட்டார்.


* மெல்போர்ன் டெஸ்டில் மயங்க் அகர்வால், ஷேவாக் போன்று ஆக்ரோஷமாக ஆடுவார் என்று எதிர்பார்ப்பதாக அவரது பயிற்சியாளர் இர்பான் சாய்த் கூறியுள்ளார்.

* ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்ட போது, அவர் முழு உடல்தகுதியுடன் இருந்தார், அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை’ என்று இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். ஹனுமா விஹாரி தொடக்க வரிசையில் சோபிக்க தவறினாலும் அதன் பிறகு அவருக்கு மிடில் வரிசையில் போதுமான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

* ‘இந்த ஆண்டில் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கிறது. அதற்கு காரணம் இந்திய கேப்டன் விராட் கோலி தான். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக அவர் திகழ்கிறார்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறியுள்ளார்.

* பிரான்ஸ் நாட்டின் சிறந்த கால்பந்து வீரராக 20 வயதான கைலியன் பாப்பே தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் அவர் ரபெல் வரானே, கிரிஸ்மான் ஆகியோரை முந்தி இந்த கவுரவத்தை பெற்றார்.

* நியூசிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.


Next Story