துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:00 PM GMT (Updated: 26 Dec 2018 7:05 PM GMT)

இந்திய முன்னணி கோல்ப் பந்தய வீரர் ஜோதி ரன்தவா, விலங்குகளை வேட்டையாடியதாக நேற்று கைது செய்யப்பட்டார்.


* இந்திய முன்னணி கோல்ப் பந்தய வீரர் ஜோதி ரன்தவா, உத்தரபிரதேச மாநிலம் கதர்னியாகாத் காட்டில் விலங்குகளை வேட்டையாடியதாக நேற்று கைது செய்யப்பட்டார். இதற்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஓமன் கால்பந்து அணியுடன் நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் அபுதாபியில் இன்று நடக்கிறது.

* 8-வது தேசிய உள்அரங்கு வில்வித்தை போட்டி செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது. 10, 14, 19 வயது மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் 15 மாநிலங்களில் இருந்து 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.


Next Story