புரோ கபடி: பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வி


புரோ கபடி: பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வி
x
தினத்தந்தி 26 Dec 2018 11:00 PM GMT (Updated: 26 Dec 2018 7:35 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 11-வது தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தா,

6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 129-வது லீக் ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் குஜராத் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை தோற்கடித்து 17-வது வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

தனது கடைசி லீக்கில் ஆடிய பாட்னா அணி 22 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 11 தோல்வி, 2 ‘டை’ என்று 55 புள்ளிகள் பெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் அடுத்த சுற்றை உறுதி செய்துள்ளன. மற்றொரு இடத்திற்கு பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா (52 புள்ளி) இடையே போட்டி நிலவுகிறது. உ.பி.யோத்தா அணி தனது கடைசி லீக்கில் பெங்கால் வாரியர்சை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது. இதில் உ.பி.யோத்தா அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் பாட்னா அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.


Next Story