பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியல்; டாப் 20ல் 3 இந்திய வீரர்கள் + "||" + BWF Men's Rankings: Kidambi, Sameer and Prannoy remain consistent in top-20

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியல்; டாப் 20ல் 3 இந்திய வீரர்கள்

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியல்; டாப் 20ல் 3 இந்திய வீரர்கள்
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தனது இடத்தினை கிதம்பி ஸ்ரீகாந்த் தக்கவைத்து உள்ளார்.
புதுடெல்லி,

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.  இதில் இந்திய வீரர்களான கிதம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா மற்றும் எச்.எஸ். பிரனாய் ஆகியோர் தங்களது இடங்களை தக்க வைத்து முதல் 20 இடங்களில் உள்ளனர்.

கிதம்பி 63,365 புள்ளிகளை பெற்று 8வது இடத்திலும், சமீர் 56,901 புள்ளிகளை பெற்று 12வது இடத்திலும் மற்றும் பிரனாய் 45,610 புள்ளிகளை பெற்று 20வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோன்று 26 வயது நிறைந்த மற்றொரு இந்திய வீரரான பி. சாய் பிரணீத் 22வது இடத்தில் உள்ளார்.

இந்த தரவரிசை பட்டியலில் ஜப்பானின் கென்டோ மொமோடா 1 லட்சத்து 4 ஆயிரத்து 650 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷீ யுகி 91,582 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் மற்றும் சீன தைபேயை சேர்ந்த சவ் டையென் சென் 82,024 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர்.