பிற விளையாட்டு

புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம் + "||" + Pro Kabaddi: Mumbai team exit

புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம்

புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம்
புரோ கபடி தொடரில், உ.பி.யோத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
கொச்சி,

புரோ கபடி லீக் தொடரில் கொச்சியில் நேற்றிரவு நடந்த முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) முன்னாள் சாம்பியன் யு மும்பா அணி (மும்பை) 29-34 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் வீழ்ந்தது. மற்றொரு வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி அணி 39-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை பதம் பார்த்தது. தோல்வியை தழுவிய மும்பை, பெங்கால் அணிகள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.


இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிசுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.யோத்தா-தபாங் டெல்லி அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. வெற்றி மட்டுமே எப்போதும் குறிக்கோள்: “6 விக்கெட் வீழ்த்தியது கனவு போன்று உள்ளது” - மும்பை அணியின் புதுமுக பவுலர் ஜோசப் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்தது கனவு போன்று உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் கூறினார்.
2. புரோ கைப்பந்து லீக்: மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதி
புரோ கைப்பந்து லீக் போட்டியில், மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு முதல் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
4. புரோ கபடி: இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி தொடரின் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு புல்ஸ் அணி தகுதிபெற்றது.
5. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி தடுமாற்றம்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி தடுமாறி வருகிறது.