தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக பெண்கள் அணி தோல்வி


தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 3 Jan 2019 9:00 PM GMT (Updated: 2019-01-04T01:22:22+05:30)

67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை,

67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதில் 2–வது நாளான நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 25–17, 25–19, 25–21 என்ற நேர்செட்டில் ஆந்திராவை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா அணி 25–18, 25–20, 25–21 என்ற நேர்செட்டில் கர்நாடகாவை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 23–25, 26–24, 14–25, 11–25 என்ற செட் கணக்கில் மேற்கு வங்காளத்திடம் போராடி தோல்வி கண்டது. இன்னொரு லீக் ஆட்டத்தில் மராட்டிய அணி 25–13, 25–18, 25–18 என்ற நேர்செட்டில் கர்நாடகாவை சாய்த்தது.


Next Story