தேசிய சீனியர் கைப்பந்து: கால்இறுதியில் தமிழக பெண்கள் அணி தோல்வி


தேசிய சீனியர் கைப்பந்து: கால்இறுதியில் தமிழக பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 8 Jan 2019 10:00 PM GMT (Updated: 8 Jan 2019 9:48 PM GMT)

தேசிய சீனியர் கைப்பந்து போட்டியின் கால்இறுதியில், தமிழக பெண்கள் அணி தோல்வி அடைந்தது.

சென்னை,

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டங்களில் கர்நாடக அணி 23-25, 25-18, 25-21, 25-20 என்ற செட் கணக்கில் அரியானாவையும், பஞ்சாப் அணி 25-27, 25-18, 25-23, 17-25, 15-12 என்ற செட் கணக்கில் ரெயில்வேயையும் வீழ்த்தியது. இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் கர்நாடகா-பஞ்சாப் (பகல் 1 மணி), கேரளா-தமிழ்நாடு (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்காள அணி 25-20, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் கர்நாடகாவை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்னொரு கால்இறுதியில் தமிழக அணி 25-21, 15-25, 25-27, 20-25 என்ற செட் கணக்கில் மராட்டியத்திடம் போராடி தோல்வி கண்டு வெளியேறியது.


Next Story