இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சாய்னா


இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சாய்னா
x
தினத்தந்தி 26 Jan 2019 9:15 PM GMT (Updated: 26 Jan 2019 6:44 PM GMT)

மொத்தம் ரூ.2½ கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்தா, 

மொத்தம் ரூ.2½ கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 18–21, 21–12, 21–18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ பிங்ஜாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் நீடித்தது. சாய்னா இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார். இருவரும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5–ல் சாய்னாவும், 6–ல் மரினும் வெற்றி பெற்றுள்ளனர்.


Next Story