துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:36 PM GMT (Updated: 7 Feb 2019 10:36 PM GMT)

சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.


பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

செஞ்சுரியனில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 26 ரன்களும், ஆசிப் அலி 25 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுக்க முடிந்தது. கிறிஸ் மோரிஸ் 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கால்பந்து தரவரிசை: இந்திய அணி சரிவு

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 6 இடங்கள் சரிந்து 103-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசையிலும் சறுக்கியுள்ளது. தரவரிசையில் பெல்ஜியம் முதலிடத்திலும், உலக சாம்பியன் பிரான்ஸ் 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றன.

Next Story