புரோ கபடி லீக்: கோழிக்கோடு அணி 4-வது வெற்றி


புரோ கபடி லீக்: கோழிக்கோடு அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 10:45 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில், கோழிக்கோடு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

கொச்சி, 

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-11, 15-11, 15-7, 12-15, 11-15 என்ற செட் கணக்கில் ஐதராபாத் பிளாக் ஹாக்சை சாய்த்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது. ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, கொச்சி புளு ஸ்பைக்கர்சை எதிர்கொள்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் கோழிக்கோடு அணியிடம் தோற்ற சென்னை அணி 2-வது லீக்கில் ஐதராபாத் பிளாக் ஹாக்சை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story