புரோ கைப்பந்து லீக்: கொச்சி அணிக்கு 4-வது வெற்றி


புரோ கைப்பந்து லீக்: கொச்சி அணிக்கு 4-வது வெற்றி
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 11:05 PM GMT)

புரோ கைப்பந்து லீக் போட்டியில் கொச்சி அணி 4-வது வெற்றிப்பெற்றுள்ளது.

கொச்சி,

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி முதல் 2 செட்களை 15-12, 15-10 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. பின்னர் சரிவில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்ட கொச்சி அணி அடுத்த 3 செட்களையும் 15-11, 15-13, 15-10 என்ற கணக்கில் சொந்தமாக்கி வெற்றியை தனதாக்கியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய கொச்சி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த 2-வது தோல்வி இது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் யு மும்பா வாலி (மும்பை)-ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. 

Next Story