புரோ கைப்பந்து லீக்: ஐதராபாத் அணிக்கு 2–வது வெற்றி


புரோ கைப்பந்து லீக்: ஐதராபாத் அணிக்கு 2–வது வெற்றி
x
தினத்தந்தி 12 Feb 2019 9:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:58 PM GMT)

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது.

கொச்சி, 

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 11–வது லீக் ஆட்டத்தில் யு மும்பா வாலி (மும்பை)–ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 13–15, 15–11, 7–15, 15–14, 15–11 என்ற செட் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 5–வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். மும்பை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3–வது தோல்வி இது. கொச்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 12–வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்–ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story