பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

சென்னையில், டென்னிஸ் போட்டி

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் அனுமதியுடன் 9-வது எம்.சி.சி.- எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நினைவு ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள எம்.சி.சி. மைதானத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.5 லட்சம் ஆகும்.

வெற்றியை நோக்கி இந்திய ‘ஏ’ அணி

மைசூரில் நடந்து வரும் இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான 2–வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2–வது நாளான நேற்று முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 140 ரன்களில் அடங்கி ‘பாலோ–ஆன்’ ஆனது. ‌ஷபாஸ் நதீம், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 252 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி நேற்றைய முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. லயன்ஸ் அணி இன்னும் 228 ரன்கள் பின்தங்கி இருப்பதால் இந்த போட்டியில் இந்திய ஏ அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

பிக்பாஷ்: இறுதிப்போட்டியில் மெல்போர்ன் அணி

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஹோபர்ட்டில் நேற்று நடந்த ஹோபர்ட் ஹரிக்கேன்சுக்கு எதிரான அரைஇறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி நிர்ணயித்த 154 ரன்கள் இலக்கை மெல்போர்ன் அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. மெல்போர்ன் அணியில் அதிகபட்சமாக கேப்டன் மேக்ஸ்வெல் 43 ரன்கள் எடுத்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
2. துளிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.
3. துளிகள்
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.
4. துளிகள்
* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
5. துளிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார்.