துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 Feb 2019 9:00 PM GMT (Updated: 15 Feb 2019 8:35 PM GMT)

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

* தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 6-வது ஓபன் தேசிய நடைபந்தயம் சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது. அண்ணாசாலை மன்றோ சிலை அருகில் இன்று காலை 6 மணிக்கு போட்டியை ரெயில்வே பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். இந்த போட்டி உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமையும். இந்தியாவின் பிரபல வீரர்கள் கே.டி.இர்பான், கணபதி உள்பட ஏறக்குறைய 200 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

* பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்னில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் சிட்னி சிக்சர்ஸ்-மெல்போர்ன் ரெனகட்ஸ் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மெல்போர்ன் ரெனகட்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் விளாசினார். நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்-மெல்போர்ன் ரெனகட்ஸ் அணிகள் மோதுகின்றன.

* நியூசிலாந்துக்கு சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கிறது.

* காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கம்பீர், ஷேவாக், ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோரும் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story