அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி


அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி
x
தினத்தந்தி 26 Feb 2019 10:00 PM GMT (Updated: 26 Feb 2019 7:05 PM GMT)

அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டியில், அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் போட்டி சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தும்குர் பல்கலைக்கழக அணி 26-2 என்ற புள்ளி கணக்கில் ஆர்.ஜி.பி.விஸ்வா வித்யாலயா பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் குருசேத்ரா பல்கலைக்கழக அணி 15-1 என்ற புள்ளி கணக்கில் ஆர்.எம்.எல்.ஏ. பல்கலைக்கழக அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி 27-13 என்ற புள்ளி கணக்கில் புனே பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் வி.டி.யூ. பெல்காம் பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், எஸ்.எம்.ஜி. பல்கலைக்கழகம், பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் அணிகள் வெற்றி பெற்றன.

Next Story