அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: மங்களூர் பல்கலைக்கழகம் வெற்றி


அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: மங்களூர் பல்கலைக்கழகம் வெற்றி
x
தினத்தந்தி 27 Feb 2019 9:30 PM GMT (Updated: 2019-02-28T01:02:43+05:30)

அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டியில், மங்களூர் பல்கலைக்கழகம் வெற்றிபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் போட்டி சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் அண்ணாமலை பல்கலைக்கழக (தமிழ்நாடு) அணி 25-16 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் பல்கலைக்கழக (சண்டிகார்) அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் மங்களூர் பல்கலைக்கழக (கர்நாடகா) அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை சாய்த்தது. இதேபோல் எம்.ஜி.பல்கலைக்கழக (கேரளா) அணி 31-20 என்ற புள்ளி கணக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தையும், குருசேத்ரா பல்கலைக்கழக (அரியானா) அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தையும் வீழ்த்தின. இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்ற 4 அணிகளும் லீக் சுற்றுக்கு முன்னேறின.

Next Story