இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 28 March 2019 10:00 PM GMT (Updated: 28 March 2019 8:16 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18–21, 21–16, 21–15 என்ற செட் கணக்கில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21–11, 21–13 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–11, 21–13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை டெங் ஜாய் சுவானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.


Next Story