மாநில சீனியர் தடகளம்: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’


மாநில சீனியர் தடகளம்: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 24 Jun 2019 11:17 PM GMT (Updated: 24 Jun 2019 11:17 PM GMT)

மாநில சீனியர் தடகள போட்டியில், செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி,

92-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 1,450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட வீரர்-வீராங்கனைகளுக்கு தனித்தனியாக 23 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் 228 புள்ளிகளை குவித்த செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) அணி 128 புள்ளிகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தது. சிறந்த தடகள வீரராக செயின்ட் ஜோசப்ஸ் அகாடமியை சேர்ந்த சுவாமிநாதனும், சிறந்த வீராங்கனையாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமியும் தேர்வு செய்யப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார்.

Next Story