ஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த அனுபவ வீராங்கனை பட்டத்துக்கு பி.டி. உஷா பெயர் பரிந்துரை

சர்வதேச தடகள கூட்டமைப்பின் மூத்த அனுபவ வீராங்கனை என்ற பட்டத்துக்கு இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா தடகள ராணி என அழைக்கப்படுபவர். 55 வயது நிறைந்த அவர் கடந்த 1985ம் ஆண்டு ஜகர்த்தா நகரில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடையோட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் தொடரோட்டம் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கம் வென்றார். இதுதவிர வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் வருகிற செப்டம்பர் 24ந்தேதி சர்வதேச தடகள கூட்டமைப்பின் (ஐ.ஏ.ஏ.எப்.) 52வது தொடக்க கூட்டம் நடைபெறுகிறது. இதில் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி உஷாவுக்கு அந்த அமைப்பின் சி.ஈ.ஓ. ஜோன் ரிட்ஜியன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலக தடகள போட்டிகளில் நீண்ட கால மற்றும் சிறந்த பணியாற்றியமைக்காக ஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த வீராங்கனை விருதுக்கு உங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்து உள்ளார். இந்த கவுரவத்திற்கு டுவிட்டரில் பி.டி. உஷா நன்றி தெரிவித்து கொண்டார்.
Related Tags :
Next Story