ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதியில் பிவி சிந்து தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதியில் பிவி சிந்து தோல்வி
x
தினத்தந்தி 26 July 2019 7:42 AM GMT (Updated: 26 July 2019 7:42 AM GMT)

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில்  பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 18-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வியின் மூலம் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பிரிவில் இருந்து பிவி சிந்து வெளியேறினார்.

Next Story