புரோ கபடி: அரியானா அணி 6-வது வெற்றி


புரோ கபடி: அரியானா அணி 6-வது வெற்றி
x
தினத்தந்தி 26 Aug 2019 11:41 PM GMT (Updated: 26 Aug 2019 11:41 PM GMT)

புரோ கபடி போட்டியில், அரியானா அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-அரியான ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை ‘ஆல்-அவுட்’ செய்து அதிர்ச்சி அளித்தாலும், அரியானா அணி சரிவில் இருந்து மீண்டு வந்து முன்னிலை பெற்றது. அந்த முன்னிலையை கடைசி வரை தக்கவைத்துக்கொண்டது. முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. 10-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி 6-வது வெற்றியை பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. 10-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உ.பி.யோத்தா அணிக்கு, கடைசி கட்டத்தில் புனேரி பால்டன் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. முடிவில் உ.பி.யோத்தா அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 10-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி 6-வது தோல்வியை சந்தித்தது.

Next Story