புரோ கபடி: புனே அணி அபாரம்


புரோ கபடி: புனே அணி அபாரம்
x
தினத்தந்தி 31 Aug 2019 12:09 AM GMT (Updated: 31 Aug 2019 12:09 AM GMT)

புரோ கபடியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி அபார வெற்றிபெற்றது.

புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 34-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 38-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி 9-வது வெற்றியை ருசித்தது. பெங்களூருவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 7.30), மும்பை - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

Next Story