பாராஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி


பாராஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி
x
தினத்தந்தி 24 Oct 2019 10:51 PM GMT (Updated: 24 Oct 2019 10:51 PM GMT)

பாராஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தகுதிபெற்றுள்ளார்.


7-வது உலக ராணுவ வீரர்களுக்கான விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பாரா தடகளத்தில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 32 வயதான ஆனந்தன் குணசேகரன் கும்பகோணத்தை சேர்ந்தவர். காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி முட்டிக்குகீழ் இடது காலை இழந்தவர் ஆவார்.


Next Story