பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெளியேற்றம்


பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெளியேற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2019 3:30 AM IST (Updated: 26 Oct 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

பாரீஸ், 

மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால், 16-ம் நிலை வீராங்கனையான அன் செ யங்கை (தென்கொரியா) சந்தித்தார். 49 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 20-22, 21-23 என்ற நேர் செட்டில் தோற்று போட்டியை விட்டு வெளியேறினார். இரண்டு செட்டிலும் கேம் பாயிண்டை வெல்லும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை சாய்னா பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார்.

17 வயதான அன் செ யங், டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் உலக சாம்பியனான பி.வி.சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தது நினைவிருக்கலாம்.
1 More update

Next Story