ஐ.பி.எல். போட்டியில் எங்கள் அணியின் தேர்வு மகிழ்ச்சி அளிக்கிறது - விராட் கோலி


ஐ.பி.எல். போட்டியில் எங்கள் அணியின் தேர்வு மகிழ்ச்சி அளிக்கிறது - விராட் கோலி
x
தினத்தந்தி 20 Dec 2019 11:34 PM GMT (Updated: 20 Dec 2019 11:34 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் தங்கள் அணியின் வீரர்கள் தேர்வு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

* சென்னை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான பால் பேட்மிண்டன் போட்டி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணி 35-20, 35-23 என்ற நேர்செட்டில் எத்திராஜ் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* தென் மண்டல பல்கலைக்கழக பெண்கள் கூடைப்பந்து போட்டி எஸ்.ஆர்.எம். கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. சென்னை பல்கலைக்கழக அணி 2-வது இடம் பிடித்தது.

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட்கோலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டியில் எங்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய சீசனை சிறப்பாக தொடங்க எதிர்நோக்கி உள்ளோம். அணியை கட்டமைப்பதிலும், வலுப்படுத்துவதிலும் நாங்கள் நிறைய ஆலோசனை நடத்தி உள்ளோம். இதுவே எங்களுக்கு நல்ல தொடக்கம் போல் தான் தெரிகிறது’ என்றார்.

Next Story